(நீதி வழங்கும் முறைமை)
541
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
குற்றம் இன்னதென்று நன்கு ஆராய்ந்து, எவரிடத்தும் விருப்பு வெறுப்பின்றி, நடுவுநிலைமை பிறழாமல் வழங்குதலே, நீதி முறைமையாகும்.
542
வான்நோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.
உலகத்து உயிர்கள் யாவும், வான்மழையை எதிர்நோக்கி வாழ்கின்றன; குடிமக்கள் அனைவரும், அரசினரின் நேர்மை எனும், செங்கோன்மை தவறாத நல்லாட்சியை எதிர்நோக்கி வாழ்கின்றனர்.
543
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
அந்தணர்க்கு உரியதான, வேதத்தில் கூறப்படும் அறங்களுக்கெல்லாம், அடிப்படையாக நின்று, உலகினைக் காப்பது, ஆளும் அரசினரின், நேர்மைமிக்க செங்கோன்மை மட்டுமேயாகும்.
544
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
545
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
குடிமக்களை அரவணைத்து, நல்லாட்சி நடத்தும் நேர்மை மிக்க ஆட்சியாளரின் அடிச்சுவட்டைப் போற்றி, இவ்வுலகமே சுற்றி நிற்கும்.
545
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
நீதிநெறியினின்று விலகாமல், நேர்மை தவறா ஆட்சி நிகழுமேயானால், அந் நாட்டோடு, பருவம் தவறா மழையும், வளம் மிக்க விளைச்சலும், சேர்ந்தே இருக்கும்.
546
வேலன்று வென்றி தருவது; மன்னவன்
கோலஅதூஉம் கோடாது எனின்.
அரசினர்க்கு வெற்றியைத் தருவது, வேல் போன்ற ஆயுதங்கள் அல்லவே; மாறாக, மக்களிடத்தே வழங்கப்பெறும், செங்கோன்மை தவறாத நல்லாட்சியே ஆகும்.
547
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
உலகின் எல்லாவற்றையும், அரசினர் காப்பார்; அந்த அரசினரையோ, அவரது செங்கோன்மை பிறழாத நீதியும், நேர்மையும் கொண்ட ஆட்சி முறைமையே காக்கும்.
548
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
549
குடிபுறம் காத்துஓம்பிக் குற்றம் கடிதல்
வடுஅன்று வேந்தன் தொழில்.
547
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
உலகின் எல்லாவற்றையும், அரசினர் காப்பார்; அந்த அரசினரையோ, அவரது செங்கோன்மை பிறழாத நீதியும், நேர்மையும் கொண்ட ஆட்சி முறைமையே காக்கும்.
548
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
நீதிகேட்டு வரும் மக்களுக்கு, எளிய தன்மையராய் இல்லாமலும், அறிவார்ந்த அறிஞர் பெருமக்களோடு ஆலோசித்து, தக்க நீதி வழங்காமலும், ஆளும் மன்னவன், பாவம் பழிக்கு ஆளாகி, தானே கெடுவான்.
549
குடிபுறம் காத்துஓம்பிக் குற்றம் கடிதல்
வடுஅன்று வேந்தன் தொழில்.
தன் நாட்டு மக்களை, பிறர் வருத்தாமலும், தானும் வருத்தாமலும் காத்து, நீதியின்பால் நின்று, அவர்களின் குற்றங்களைக் களைதல் என்பது, அரசினரின் தொழில்தானே யொழிய, பழியாகாது.
550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
கொலை போன்ற, கொடிய செயல்கள் புரிவோரை, அரசன் தண்டித்தல் என்பது, பயிர் செழித்திட, களைகளை அழித்தொழிப்பதற்கு நிகரான செயலாகும்.

