(துன்பம் கண்டு மனம் கலங்காமை)
2. பொருட்பால் | 2.1. அரசியல் | அதிகாரம்: 63
621
இடுக்கண் வருங்கால் நகுக; அதனைஅடுத்துஊர்வது அஃதுஒப்பது இல்.
துன்பம் வரும்போது அதற்காக கலங்காமல், மனதிற்குள் மகிழ்ந்துகொளல் வேண்டும்; அந்த மனமகிழ்ச்சியைப் போன்று, நமக்கு வரும் துன்பத்தை எதிர்கொண்டு வெல்லும் ஆற்றல் மிக்கது வேறில்லை.
622
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுஉடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
பெருவெள்ளம் போன்று துன்பம் வந்தாலும், அறிவுடையவர் வருகின்ற துன்பத்தின் தன்மையை உணர்ந்து அறிந்து, அவர் நினைத்த கணமே அத்துன்பம் கெடும்.
623
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
624
மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற
துன்பங்களைக் கண்டு மனம் கலங்காத வல்லமை உடையவர்கள், தமக்குத் துன்பம் வரும்போது, தம் மன ஊக்கத்தால், வரும் துன்பத்திற்கே துன்பம் தந்து அதனை வென்று விடுவர்.
624
மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
தடைகள் நிறைந்த பாதைகளில், வண்டியை இழுத்துச் செல்லும் எருதினைப் போன்று, விடா முயற்சியோடு, வல்லமை கொண்டு செயல்படுபவருக்கு வரக்கூடிய துன்பங்களே துன்பப்படும்.
625
அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்.
ஒருவர் துன்பங்களைக் கண்டு மனம் கலங்காத ஆற்றல் கொண்டவராக இருப்பவராயின், அவருக்கு அடுத்தடுத்த தொடர்துன்பங்கள் வந்தாலும், அவை யாவும் துன்பப்பட்டு அழிந்து போகும்.
626
அற்றேம்என்று அல்லல் படுபவோ பெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்?
இத்தனை செல்வ வளங்களைப் பெற்றோமே, என்று அகமகிழ்ந்து பற்றுடன் அவற்றைக் காத்திடல் குறித்து, எண்ணமில்லா மனம் கொண்டவர்கள், பின்னர் வறுமை வந்து, எதுவும் இல்லாத போது மட்டும் துன்பப்படுவார்களா?
627
இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
உடம்பானது, தம் துன்பத்திற்கு இலக்காகும், என்பதை அறிவால் உணர்ந்த மேன்மக்கள், தம் உடம்பிற்கு வரும் துன்பத்தை, துன்பமாக எண்ணி, மனம் கலங்க மாட்டார்கள்.
628
இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்
துன்பம் உறுதல் இலன்.
இன்பத்தை விரும்பாதவராகவும், ஒருவர்க்குத் துன்பம் வருவதானது என்பது, இயல்பான ஒன்றென்பதையும் உணர்ந்தவர், தமக்குத் துன்பம் வருங்கால், அதனை துன்பமாகக் கருதி மனம் கலங்க மாட்டார்.
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
தமக்கு இன்பம் வரும் போது அதற்காக, பெரிதாய் கொண்டாடி மகிழ்ந்திடாத இயல்புடையவர், துன்பம் வரும்போதும், அதற்காக மனம் வருந்தி, அதனைத் துன்பமெனப் பொருட்படுத்த மாட்டார்.
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.
தமக்கு வரும் துன்பத்தை, இன்பமெனக் கருதும் மனஉறுதி உடையவர்களுக்கு, அவர்களின் பகைவர்களாலும் மதித்துப் பாராட்டப் பெறும், பெருமை வந்து சேரும்.

