41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை.
இல்லறம் கொண்டு வாழ்பவன் யாரெனின், பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூன்று உறவுகளுக்கும் உற்ற துணையாய் இருந்து வழிநடத்துபவனே ஆவான்.
42
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
இல்வாழ்வான் என்பான் துணை.
துறவிகளுக்கும், வறுமையால் வாடுவோர்க்கும், ஆதரவில்லாததால் இறந்தவரைப் போல் துயரம் கொண்டோர்க்கும் இல்லற வாழ்வில் இருப்பவரே துணையாவார்.
43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
முன்னோர்கள், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐவரிடத்தும் தவறாமல் அறச்செயல்கள் புரிதல் சிறந்த கடமையாகும்.
44
பழிஅஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
46
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
பழிக்கு அஞ்சி நல்வழியில் பொருள் ஈட்டுதலையும், அதை பிறருடன் பகுத்து உண்ணுதலையும், இல்லறத்தில் கடைப்பிடிப்பவரின் வாழ்வில் எப்போதும் குறையேதும் வருவதில்லை.
45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
இல்வாழ்க்கையில், கணவன்-மனைவி, பிள்ளை ஆகியோரிடையே அன்பும், நட்பு-சுற்றத்தாரிடத்தே, அறம் மிக்கதுமான குணமுமே அவ்வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.
46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?
ஒருவன் அறநெறி தவறாது, இல்வாழ்க்கையை நடத்துவான் எனில், அதை விடுத்து அறம் மீறிய வழியில் செல்வதால், பெறப்போகும் பயன் தான் என்னவோ?
47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
48
முயல்வாருள் எல்லாம் தலை.
இல்லறத்தை நல்லறத்தோடு வாழ்பவர், இவ்வுலகில், எத்தகு திறத்தாரினும் முதன்மையானவர் ஆவார்.
48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா; இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
நோற்பாரின் நோன்மை உடைத்து.
பிறரையும் அறநெறி தவறாது வழிநடத்தி, தானும் அறம் தவறாத வழி நிற்பவரின் இல்லற வாழ்வு, துறவு வாழ்வை விடவும் வல்லமை மிக்கது ஆகும்.
49
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.
50
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.
அறம் என்று போற்றப்படுவதே இல்வாழ்க்கை. அதுவும், பிறரால் பழிக்கப்படாத தன்மையதாயின் மேலும் சிறப்பானதாகும்.
50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
தெய்வத்துள் வைக்கப் படும்.
இவ்வுலகில், வாழ வேண்டிய அறநெறிகளின்படி வாழ்கின்றவர், மேலுலகத் தெய்வத்தினராக மதிக்கப்படுவர்.

