அதிகாரம் #82 தீ நட்பு
(தீயவர்களுடனான நட்பு)
பொருட்பால் | அங்கவியல் | குறள்# 811-820
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
நற்பண்பற்றவர்கள் நட்பின்வழியே, அன்புகாட்டி உருகுமாறு செய்தாலும் அந்த நட்பினை மேலும் வளர்த்துக் கொள்வதைக் காட்டிலும், குறைத்துக் கொள்ளுதல் நன்மை பயப்பதாகும்.
812
உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்?
தமக்குப் பயன் உள்ளவரை நட்பு பாராட்டிவிட்டு, பின்பு பயன் கிடைக்காத நிலை எனும்போது, பிரிந்து செல்வோருடனான நட்பு இருந்தாலென்ன இழந்தால் தான் என்ன?
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
814
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
815
செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
816
பேதை பெரும்கெழீஇ நட்பின் அறிவுடையார்
நட்பினால் கிடைக்கும் பயனை எதிர்பார்த்துப் பழகுபவர், கூலியைப் பெற்று உறவாடும் பாலியற் தொழிலாளர், களவுத் தொழில் புரியும் கள்வர் இந்த மூவரும் ஒரே நிகரானவர் ஆவர்.
814
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
போர்க்களத்தில் நம்மைக் கீழே தள்ளிவிட்டுத் தப்பியோடும் குதிரையைப் போன்ற தீயவர்களுடன், நட்பு கொண்டிருத்தலை விடவும் தனித்து இருப்பதானது சிறப்பு மிக்கதாகும்.
815
செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
நன்மைகள் செய்திருந்த போதிலும், நமக்கு பாதுகாப்பாக அமைந்திடாத அற்பர்களுடன் நட்பு பாராட்டுதலை விடவும், அவர்களைப் புறந்தள்ளி விடுவது நன்மை பயக்கும்.
816
பேதை பெரும்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
அறிவற்றவரோடு மிகவும் நெருங்கிய நட்பு கொள்வதை விடவும், அறிவுடையோருடன் பகைமை கொண்டிருத்தல் கோடி நன்மை பயப்பதாகும்.
817
நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
சிரித்துப் பேசிப் பழகுவதாக நடிக்கும் இயல்பினரோடு கொள்ளப்படும் நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடிக்கும் மேலான அளவில் நன்மை பயப்பதைப் போன்றதாகும்.
818
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
தம்மால் முடித்திட இயலும் செயலை செய்யவிடாமல் உடனிருந்து தடுப்பவருடனான நட்பை, அவரிடத்தே சொல்லாமலே கைவிட்டு விடுதல் வேண்டும்.
819
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
செய்யும் செயல் ஒன்றும், சொல்லும் சொல் வேறாகவும் முரண்பட்ட இயல்பில் வாழ்வோருடனான நட்பானது, கனவிலும் கூட துன்பம் தரவல்லது ஆகும்.
820
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.
தனியாக நன்கு உறவாடி நட்பு பாராட்டிவிட்டு, வெளியில் பலர் கூடும் பொதுமன்றத்தில் நம்மை இழிவு செய்பவருடனான நட்பு, சிறிதும் அணுகிவிடாமல் நம்மைக் காத்துக் கொளல் வேண்டும்.

