Powered By Blogger

முகப்புரை

 

"உலகப் பொதுமறை" திருக்குறள் சிறப்புகள்

"தெய்வப் புலவர்"  திருவள்ளுவர்
⭘◠◡◠◡◠◡◠◡◠◡◠⭘


  • திருக்குறள், சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்கள் திரட்டிற்குட்பட்டதாகும்.
  • குறள் வெண்பா வகையினாலானது.
  • திருக்குறள் 133 அதிகாரங்களாகவும், ஒவ்வொரு அதிகாரமும் 10 செய்யுட்பாக்கள் வீதம், ஆக 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது.
  • திருக்குறள் அறம், பொருள், இன்பம் என மூன்று பால் பகுப்புகளாக அமையப்பெற்றது.
  • திருக்குறள் மானுடவியலின் அறநெறிகளை நீக்கமற வலியுறுத்தியும் வாழ்க்கை வழிகாட்டுதல்களையும் பகுத்து சொல்லப்பட்ட மிகவும் தொன்மையான படைப்பாகும்.
  • திருக்குறள் பொதுத் தன்மையோடு மதச்சார்பற்ற வகையிலான படைப்பாகக் கருதப்படுகிறது. 
  • ஓலைச் சுவடியில் எழுதப்பட்டிருந்த திருக்குறள் அச்சில் கொணரப்பட்ட ஆண்டு 1812.
  • திருக்குறளுக்கு முதன் முறை உரை எழுதியவர் மணக்குடவர்.
  • திருக்குறளில் குறிப்பறிதல் எனும் தலைப்புடைய இரண்டு அதிகாரங்கள் உள்ளன.
  • அவையாவன; பொருட்பாலில் அதிகாரம் 71மற்றும் இன்பத்துப்பாலில் அதிகாரம் 110.
  • திருக்குறளை முதல் முறையாக பிற மொழியில் மொழி பெயர்த்தவர், வீரமா முனிவர்.
  • திருக்குறளை முதல் முறையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர், G.U.போப் ஆவார்.
முப்பால்களும் குறள்களும்
1. அறத்துப்பால் (38 அதிகாரங்கள்)
    1. பாயிரம் 1-4
    2. இல்லறவியல் 5-24
    3. துறவறவியல் 25-37
    4. ஊழியல் 38

2. பொருட்பால் (70 அதிகாரங்கள்)
    1. அரசியல் 39-63
    2. அமைச்சியல் 64-73
    3. அரணியல் 74-75
    4. கூழியல் 76
    5. படையியல் 77-78
    6. நட்பியல் 79-95
    7. குடியியல் 96-108

3. இன்பத்துப்பால் (25அதிகாரங்கள்)
    1. களவியல் 109-120
    2. கற்பியல் 121-133

  • எல்லாத் தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறப்பு மிக்க குணநலன்களால் தான் திருக்குறள் உலகில் பொது மொழியான ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு சிறப்பு பெற்றுள்ளது. 
  • இன்று வரையிலும் உலகெங்கிலும் புகழ் பெற்ற ஒரே நூலாகத் திகழ்ந்து வருகின்றது என்றால் அது மிகையில்லை.


நன்றி நவிலல்

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *