அதிகாரம் #80 நட்பு ஆராய்தல்
(நல்ல நட்பினை ஆராயும் முறைமை)
பொருட்பால் | அங்கவியல் | குறள்# 791-800
791
நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின்
வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு.
தீய நட்பு என்பதை முன்னமே ஆராயாமல் நட்பு கொண்டு விடின், பின்னர், அதன் தீமையினின்று விலக இயலாதபடி பெருங்கேடு தரவல்லது வேறெதுவும் இல்லை.
792
ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
ஒருவரது குணநலன்கள், குற்றச் செய்கைகளைக் குறித்து திரும்பத் திரும்ப நன்கு ஆராயாமல், கொள்ளும் நட்பு கடைசியில் தான் சாகும் நிலையிலான துயரத்தைத் தரும்.
793
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு.
ஒருவரது குணம், குடிப்பிறப்பு, குற்றம் மற்றும் அவரின் குறைவில்லாத சுற்றத்தார்கள் ஆகியவற்றைக் குறித்து தீர ஆராய்ந்தறிந்த பின்னரே அவரோடு நட்பு கொள்ளுதல் வேண்டும்.
794
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
உயர் குடியில் பிறந்து, தம் மீது வரப்பெறும் பழிக்காக நாணுவோர் தம்மை, பொருள் கொடுத்தாகினும் தம்மோடு நட்பாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
795
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.
796
கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதுஓர் கோல்.
797
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
நெறிதவறி தவறு செய்பவரை, அழச்செய்யும்படி இடித்துரைத்து, அறிவுரை புகட்டும் வகையில் அறிவும் வல்லமையும் மிகக் கொண்டோரை, ஆராய்ந்து அவர்தம் நட்பினைக் கொள்ளுதல் வேண்டும்.
796
கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதுஓர் கோல்.
தீங்கு வந்த போதும் அதில் ஒரு நன்மை இருக்கும்; அந்த தீங்கின் போது தான், நண்பர்கள் எத்தகையவர்கள் என்பதை அளந்து காட்டும் கருவியாக அமைவதையும் கண்டு அறிந்திடக் கூடும்.
797
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
ஒருவருக்கு கிடைக்கும் ஊதியம், அதாவது நற்பயன் என்பதாவது, அவர் அறிவில்லாதவரோடு கொண்டிருக்கும் நட்பைத் துறந்து அதனின்று விடுபடுவதாகும்.
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றுஅறுப்பார் நட்பு.
ஒருவரது உள்ளத்தின் ஊக்கம் சிதைவதற்குக் காரணமான செயல்கள் குறித்து எண்ணுதல் வேண்டாம்; அதுபோல், துன்பத்தின்போது விட்டு விலகிச் செல்வோர் நட்பையும் விலக்கி ஒழித்து விடுக.
799
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்.
ஒருவர் சாகும் சமயத்திலும் கூட, அவர்தம் துன்ப காலத்தில் கைவிட்டு விட்டு விலகிச் சென்ற நட்பைப் பற்றி நினைக்கும் போது, அந்த நினைவு அவரது உள்ளத்தினை வருத்தும்.
800
மருவுக மாசற்றார் கேண்மைஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
மனத்தால் மாசற்றவர்களை நட்பாகக் கொளல் வேண்டும்; மாசு கொண்ட ஒருவரின் நட்பை ஒரு விலையைக் கொடுத்தாவது விலக்கிவிடுதல் வேண்டும்.

