அதிகாரம் #78 படைச் செருக்கு
(ஒரு நாட்டின் படையின் வீரச் செறிவு)
பொருட்பால் | அங்கவியல் | குறள்# 771-780
771
என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர்! பலர்என்ஐமுன்நின்று கல்நின் றவர்!
772
கான முயல்எய்த அம்பினில் யானை
பகைவர்களே ! என் தலைவன் முன்பாகப் போரிட முனைந்து நில்லாதீர்! முன்னர், இதுபோல் அவரை போரில் எதிர்கொண்டு அதனால், மாண்டுபோய் நடுகற் சிலையாகிப் போனவர் பலர்!
772
கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
773
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
774
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
775
விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
776
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.
777
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
778
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்.
779
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
காட்டினுள் அஞ்சியோடும் முயலைக் குறிவைத்து எய்தி, அதை வீழ்த்திய அம்பை ஏந்துவதைக் காட்டிலும் வலிமை மிக்க யானையைக் குறிவைத்து, அது வீழாது பிழைத்தபோதும் அந்த வேலை ஏந்துதலானது சிறப்புடையதாகும்.
773
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
பகைவரைக் கண்டு அஞ்சாமல் எதிர்க்கும் வீரத்தை, பெரும் ஆண்மை எனப் போற்றுவர்; அப்பகைவர்க்குத் துன்பம் வருங்கால் அவர்பால் இரக்கம் கொண்டு உதவி புரிதலானது, அவ்வீரரின் ஆண்மை மேலும் சிறப்புடையது என்பர்.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
போர்க்களத்தில் எதிரேவந்த யானை மீது கையிலிருந்த வேலை எய்தி வீழ்த்தியபின், அடுத்து வரும் யானையை வீழ்த்த, வேறு வேல் தேடிவரும் வீரன் தன் உடல் மீதே பாய்ந்திருந்த வேலைப் பறித்து மகிழ்வான்.
775
விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
போரில் பகைவரது படையை எதிர்கொண்டு சினத்துடன் நோக்கும் கண், பகைவர் தன் மீது வேல் எய்தும் போது ஒரு நொடி மூடி இமைத்தலும் அது வீரர்க்கு புறமுதுகு காட்டி ஓடுதற்கு ஒப்பாக எண்ணுவர்.
776
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.
வீரன் தன் வாழ்ந்த நாட்களைக் கணக்கிட்டு, அவற்றுள் போர்க்காலங்களில் தன் உடலில் விழுப்புண் படாத நாட்களை எல்லாம் வாழ்நாளில் பயன்படாமல் வீணாகிப் போன நாட்களோடு ஒதுக்குவான்.
777
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
தாம் மறைந்த பின்னர் தன்னுடன் வாராமல் இப் பூமியெங்கும் பரவி நிலைத்திருக்கக் கூடிய புகழை மட்டும் விரும்பி, தன் உயிரைப் பற்றிக் கவலை கொள்ளாத வீரரின் காலில் வீரக்கழல் கட்டிக் கொள்வதானது அழகு செய்யும் தன்மையதாகும்.
778
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்.
போர்க்களத்தில் தம் உயிர் குறித்த அச்சம் கொள்ளாமல், தீரத்துடன் போர் புரியும் வீரமறவர்கள் தம் தலைவன் சினம் கொண்ட போதிலும், கடமையாற்றுதலில் தமது சிறப்பு குறையாதவர்கள் ஆவார்.
779
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
வீரர் ஒருவர், சபதம் செய்து போர்களத்தினிற் உயிர் துறக்கவும் துனிந்தவராய் வீரப்போர் புரிந்தும், அதில் பிழையாகிப் போனால் அதற்காக அந்த வீரரை தோல்வியுற்றவர் என இகழ்ந்து பேசுபவர் எவரும் இலர்.
780
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.
போரில் வீரர் ஒருவர் தன்னைக் காத்த தலைவனின் கண்ணீர் மல்க வீர மரணம் அடையப் பெறுவாராயின், அத்தகு மரணம் யாசகமாக இரந்து பெறத்தக்கதான பெருமை உடையது ஆகும்.

